×

அண்மையில் Middlefield & Steel சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெருவிபத்தில் சிக்குண்டு மரணமான காரைநகர் நீலிப்பந்தனையைச்
சேர்ந்த கனகசபாபதி மனோரஞ்சனாவின் பூதவுடல் சனிக்கிழமை மாலை Warden&Sheppard சந்திப்பிலுள்ள
Highland Funeral Home மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்திரளான பொதுமக்கள்
நீண்டவரிசையில் காத்து நின்று தமது இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

மனோரஞ்சனாவின் மரணத்தினால் பெரும் அதிர்ச்சியிலிருந்தும் பெரும் துயரத்திலிருந்தும் இன்னமும்
மீளமுடியாதிருக்கும் அன்னாரது குடும்பத்தினர் அழுது புலம்பிய காட்சியும் அஞ்சலி செலுத்திய மக்கள் பலரும்
கண்ணீர் விட்டு துயரத்தை வெளிப்படுத்திய காட்சியும் அனைவர் நெஞ்சங்களையும் கிழவைப்பனவாகவிருந்தன.
பொது அமைப்புக்கள் பலவற்றினாலும் குடும்ப நண்பர்கள் உறவினர்கள் என்போரினாலும் வைக்கப்பட்டிருந்த
மலர்வளையங்கள் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தினை நிரப்பியிருந்தன. பல பொது அமைப்புக்களும் தனிப்பட்டோரும் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தனர்.

கடந்த நாட்களாக அன்னாரது மரணத்திற்கு முக்கியமளித்து வருகின்ற கனடாவின் முன்னணி ஊடகங்கள் பலவும் இவ் இறுதி அஞ்சலி நிகழ்வினை வீடியோ செய்ததையும் புகைப்படம் எடுத்ததையும் காணக்கூடியதாகவிருந்ததுடன் அவை பின்னர் குறிப்பிட்ட ஊடகங்களினால் ஒளிபரப்பப்பட்டும் பிரசுரிக்கப்பட்டுமிருந்தன.

ரொறன்ரோ போக்குவரத்துச் சபை தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், விபத்து நிகழ்ந்த
வட்டாரத்தின் மாநகரசபை உறுப்பினர் ஆகியோரும் அன்னாருக்கு நேரில் சமூகமளித்து இறுதி அஞ்சலியினை
தெரிவித்ததுடன் அன்னாரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறியிருந்தனர்.

அன்னாரின் குடும்ப நண்பர் திரு.கனக.சிவகுமாரன் தலைமையில் இரங்கலுரைகள் பல அமைப்புக்களின்
பிரதிநிதிகளாலும் குடும்ப உறுப்பினர்களாலும் நிகழ்த்தப்பட்டிருந்தன. கனடா இந்து சமயப் பேரவையின்
செயலாளர் திரு.சிவ.முத்துலிங்கம், தமிழ் இசைக் கலா மன்றத்தின் இதழாசிரியர் சட்டத்தரணி கனக.மனோகரன்,
கனடா-காரை கலாச்சார மன்ற உப-தலைவர் திரு.ச.தவராசா, கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன், குடும்ப நண்பர் திரு.ரஞ்சன்
கணபதிப்பிள்ளை ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தியிருந்தனர்.

அன்னாரின் சகோதரரின் பிள்ளைகளான திருமதி.துஷ்யந்தி துஷ்யந்தன், ரிஷி கனகராசா, வைகுந்தன் தர்மராசா மற்றும் உறவினரின் மகனான அமுதீசர் சச்சிதானந்தம் ஆகியோர் ரஞ்சனா தம்மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்து மகிழ்ந்திருந்த காலங்களை நினைவுகூர்ந்து தமது உணர்வுகளை பகிர்ந்திருந்தனர். அன்னாரின் இளைய
சகோதரர் திரு.பஞ்சலிங்கம் நன்றி தெரிவித்து உரையாற்றியிருந்தார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் ஈமக்கிரியைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடலை தாங்கிய பேழை
மலர்சாலையிலிருந்து உறவினர்களால் எடுத்துவரப்பட்டபோது மலர்ச்சாலை முன்றலில் பாதையின் இருமருங்கிலும் அணிவகுத்து நின்ற மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்;. மனோரஞ்சனாவின் பூதவுடலை தாங்கிய பேழை ஊர்தியில் ஏற்றப்பட்டு பெருமளவான பொதுமக்களது வாகனங்கள் இவ்வூர்தியை பின்தொடர அன்னாரது இறுதி ஊர்வலம் தகனம் செய்யப்படும் இடமாகிய Elgin Mills மயானத்தை நோக்கி ஆரம்பித்தது. ஓம் சிவாய நம ஓம் நமசிவாய என்கின்ற மந்திரத்தை அனைவரும் உச்சரித்தவண்ணம் இருக்க அன்னாரது கணவர் கனகசபாபதி தீ மூட்டியதைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது.

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×