கணக்கும் கரிசனையும்…! (முழுதும் வாசித்தால் மட்டும் புரியும்..)

கணக்கும் கரிசனையும்…! (முழுதும் வாசித்தால் மட்டும் புரியும்..)

காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்) கடந்த பல ஆண்டுகளாக பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிக்காகவும், பரிசளிப்பு நிகழ்வுகளிற்கான அனுசரணைகளிற்காகவும் வருடந்தோறும் கையேந்த வேண்டிய நிலையில் இருந்தது.

2023ம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிலமை மாறியுள்ளது. இப்பாடசாலையில் நான் ஆரம்ப கல்வியை கற்றதனால் பழைய மாணவனாக என்னால் அதீத அக்கறை காட்டவேண்டியிருந்தது. வெளியூர்களில் இருந்து பணிக்காக வரும் அதிபர், ஆசிரியர்களிற்கு ஊக்கமளித்தால் மட்டுமே விரும்பி பணியாற்றுவார்கள்.

ஊரிற்கு செல்லும் ஒவ்வொரு தடவைகளிலும் உரிமையோடு எனது ஆரம்ப பாடசாலைக்கு சென்று பார்வையிடுவதுடன் தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளேன். என்போன்று மேலும் சில பழைய மாணவர்களும் காலங்கள் பல கடந்தாலும் ஆரம்ப பாடசாலையினை மறக்காது சென்று வழிபட்டு வருவது உண்டு.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக இப்பாடசாலைக்கும் 10 இலட்சம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 2015 இல் வங்கியில் வைப்பில் இட்டு கொடுக்கப்பட்ட போதிலும் எனது பாடசாலை என்பதால் என்காலத்து இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் எது செய்தாலும் அதில் நிறைவும் பயனும் அத்துடன் தொடர்ந்து அதனை கண்காணித்து அதிஉச்ச பயனை பெற்றுக்கொடுக்க தனிப்பட்ட வகையிலும் extra mile ஓடுவேன் என்பதை அறிந்தவர்கள் ஊரிற்கான எப்பணியானாலும் மனமுவந்து உதவ முன்வருவார்கள்.

அவர்களில் 18 பழைய மாணவர்கள் இணைந்து 2023.01.31 அன்று 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்களை வைப்பில் இட்டு வழங்கினோம்.

2023-2024 ஒருவருடத்தில் வங்கி வட்டியாக 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்களை 23% விகித நிரந்தர வைப்பில் பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்தது, மீண்டும் 2024-2025 ஜனவரி வரை ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களை பெற்றுக்கொடுத்தது.

என்மூலமாக பணத்தை வழங்கியவர்களிற்கும் நாம் வளங்கிய பணத்தின் ஊடாக பாடசாலையானது என்ன பயனை பெற்று வருகிறது என்பதனையும் நம்பிக்கையோடு பணத்தை வளங்கியவர்களிற்கும் பொதுப்பணியில் இன்னொருவரிடம் பணம் பெற்றிருந்தால் அதன் கணக்கு விபரங்களை அவர்களிற்கு ஐயம்திரிபற வளங்கவும் நிர்வாகங்களை தொடர்பு கொண்டு வெளியிட்டும் வருகிறேன்.

அந்த வகையில் காரைநகர் அ.மி.த.க.பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்) எம்மால் வளங்கப்பட்ட 16 1/2 இலட்ச ரூபாய்களில் இருந்து கடந்த இரண்டு வருடங்களில் பெற்ற வங்கி வட்டிப்பணத்தின் வரவும் செலவும். 2023 இல் இவ்வைப்புக்காக பணம் வழங்கியவர்களின் விபரமும் எடுத்து வரப்பட்டுள்ளது.

மேலும் இப்பாடசாலையின் சத்துணவு சமையல் உதவியாளருக்கு தீசன் திரவியநாதன் பிறந்தநாள் நிரந்தர வைப்பு 50 இலட்சம் நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வங்கி வட்டியில் இருந்து மாதாந்தம் 5,000 ரூபாய்கள் கிரமமாக பெறும் வகையில் standing order மூலம் வளங்கப்படுவதும் இச்சந்தர்ப்ப்பத்தில் அறியப்படுத்துகிறேன்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

நீங்கள் up to date ஆக இல்லையெனில் உங்களை up date செய்ய வேண்டியதும் என்பணியே… காரணம் நான் அரசியல் செய்யவில்லை.

பாலர் வகுப்பு படிக்க மாட்டேன் பத்தாம் வகுப்பில் அத்தனையும் pass பண்ணுவேன் என்பது போலவும்…,

Leave a Reply