×

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி பேரம்பலம் கனகாம்பிகை அவர்கள் 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன்(S.A.நாதன் – முன்னாள் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், மெமோறியல் கல்லூரி, மானிப்பாய்) மற்றும் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கட்டட ஒப்பந்த மேற்பார்வையாளர், காரைநகர்) தங்கமுத்து தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற முன்னாள் புகையிரத நிலைய அதிபர்(மருதானை) பேரம்பலத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(இலங்கை சிவில் சேவை தலைமை உத்தியோகத்தர், சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு – கொழும்பு), நடராசா(முன்னாள் இளைப்பாறிய அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி), குமாரசாமி(விவசாய போதனாசிரியர், பேராதனை பல்கலைக்கழகம் – கண்டி), கந்தசாமி(முன்னாள் மாணவன், பேராதனை பல்கலைக்கழகம் – கண்டி), ஞானாம்பிகை, அகிலாம்பிகை, மற்றும் மகாதேவன்(இளைப்பாறிய வருமான வரி உத்தியோகத்தர்-கொழும்பு, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரசோதி, பரமேஸ்வரி, சரஸ்வதி, புனிதவதி, காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் திருக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தியாகராசா மற்றும் சிவநாதன், வன்னியசிங்கம், சுப்பிரமணியம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசநாயகம்(முன்னாள் இளைப்பாறிய கணக்காளர், பட்டினசபை-மன்னார்) மற்றும் செல்வநாயகம்(இளைப்பாறிய கணக்காளர், புள்ளி விபரத்திணைக்களம் – கொழும்பு), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரஞ்சோதி மற்றும் ஜெயமணி, காலஞ்சென்றவர்களான திரவியநாதன், கருணாகரன் (இளைப்பாறிய இரசாயணவியல் ஆசிரியர்-யாழ்ற்ரன் கல்லூரி) மற்றும் சிவானந்தவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாசுகி-தர்மகுலசிங்கம், சத்தியராணி-மகேஸ்வரன், கவிதா-ரகுபதி,

கௌசல்யா-கணேசானந்தன், மதிவதனன்-தனேஸ்வரி, சிவதர்மினி-கோகுல்ராஜ், பகீரதி-அருண், ஜனனி-கஜேந்திரன்(பட்டதாரி உத்தியோகத்தர், சுற்றாடல் அதிகாரசபை-மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), மயூரி(மாணவி-மருத்துவ பீடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), லோகநவநீதன்(மாணவன்-கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்), தினேஷ்(மென் பொறியியலாளர்), துவாரகா(மருந்தாளர்), துஷானி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

சரண், திவ்வியா, மதுரா, பிரணவன், பவிஷன், மகிஷா, தனுக்ஷன், மதுஷன், அபிக்ஷன், அஸ்விக்கா, அஸ்வியா, ஆதிரன், அனன்யா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை மு.ப.11.00 மணியளவில் வவுனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு: நேரடி மற்றும் Viber திருக்குமார் (மகன்) : +33 617 684 864

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×