×

அமரர் கே.கே.சுப்பிரமணியம் அவர்களிற்கு காரைநகர் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி!

காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகக்
கொண்டு, சைவத்திற்கும், தமிழுக்கும்
பெரும் தொண்டனாக விளங்கிய அமரர் கந்
தப்பு சுப்பிரமணியம் அவர்களின் மறைவு
காரைநகர் மக்களிற்கும் சைவப்பெரு
மக்களுக்கும் பெரும் இழப்பாகும். அன்னாரது மறைவினையொட்டி அன்னாரது சேவைகளை நினைவுகூரும் முகமாக ‘எனது ஊர் காரைநகர்’ இந்நினைவாஞ்சலியை சமர்ப்பணம் ஆக்குகின்றது.

2007ம் ஆண்டு அமரர் அவர்கள் கனடா வருகையின் போது வரசித்திவிநாயகர் ஆலய தேர் உற்சவ திருவிழாவில் இளையபாரதி மற்றும் ஸ்தபதி ச.ஜெயராசா அவர்களுடன்.( காரை சிவன் சிற்பத்தேரினை உருவாக்கிய ஸ்தபதி ச.ஜெயகாந்தன் அவர்களின் சகோதரர்)

மு.மு.சுப்பிரமணியம் என்றால் காரைநகரில் அறியாத பால்குடி மாறாத பிள்ளைகளே அன்று அரிதாக இருந்தார்கள். தனது வாழ்நாளில் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய பணிகளையும் அதன் மூலம் அவருக்கு வளங்கப்பட்ட கௌரவங்களையும் பட்டங்களையும் மட்டுமே எழுதுவதற்கு சில பக்கங்களாகலாம். பரோபகரமணி, சைவத்திருத்தொண்டர், குருபக்த
சிரோன்மணி, ரசிக கலாமணி, அருள்நெறி தொண்டர், சைவதர்ம சுரபி, சைவ ஸ்ரீ கனகஜோதி, சிவநெறி செல்வர்,
சைவநெறி காவலர்.

2007ம் ஆண்டு கனடாவிற்கு வருகை தந்த அமரர் அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ காலாண்டு சஞ்சிகையின் ஒரு சில இ
தழ்கள் மட்டுமே வெளிவந்திருந்த வேளையிலும், www.karainews.com இணையத்தளத்தின் சேவையறிந்து தொடர்பு கொண்டு தனது அனுபவங்களையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அன்னாரது இல்லத்தில் காரைநகரைச் சேர்ந்த முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் மனேகரி சதாசிவம் அவர்களும் அந்த கலந்துரையாடலின் போது உடனிருந்தார்.

அன்று பல மணிநேர கலந்துரையாடலின் போது பல அனுபவங்களையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அன்று அன்னாருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களை எழுத்து வடிவாக மனேகரி சதாசிவம் அவர்கள் எழுதியனுப்பியிருந்தார்.

கனடாவிற்கு வருகை தந்திருப்பது பற்றி: கனடாவிற்கு பலமுறை வந்திருக்கின்றேன். ஆனால் இந்தமுறை வந்த பொழுது கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடலில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம் ஆகும். இடம்பெயர்ந்து வந்த காரைநகர் மக்கள் நூற்றுக்கணக்காக ஒன்றுகூடிய ஒன்றுகூடலில் பலரையும் கண்டு பேசக்கூடிய வாய்ப்பும் ஊர் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த தடைவ பெற்றிருப்பது பெரும் பாக்கியமாகும். இதன் மூலம் கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையினை நான் கண்டு கொள்கின்றேன்.

கடந்த 25 ஆண்டுகளாக காரைநகர் மண்ணிற்கு என்னால் முடிந்த சேவைகளை நான் செய்து கொண்டிருக்கின்றேன். மறைந்த மாமனிதன் கலாநிதி ஆ.தியாகராஜா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மணற்காடு முத்துமாரி அம்மன் கோயிலுக்கு மின்சாரம் வளங்கியது பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தண்ணீர் திட்டம் வெளியீடு, முதன் முதலில் குடிநீர் குழாய்கள் வளங்கப்பட்டது, ‘காரை ஒளி’ சஞ்சிகை மாதா மாதம் வெளியிட்டது, காரைநகர் வைத்தியசாலை புனரமைப்பு என அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களுடன் உடனிருந்தேன். அவரது சேவைகளும் அன்று அவரினால் முன்வைக்கப்பட்ட திட்டங்களும் இன்னும் முன்னெடுத்துச் செல்லப்படுவது அவரின் திறமையின் வெளிப்
பாடுகளாகும். காரைநகர் பேரூந்து சேவை சிறப்பாக நடைபெற களபூமியில் பஸ் டிப்போ அன்று உருவாக்கப்பட்டது.

காரைநகரில் மழைநீரை சேமித்து குடிநீர் திட்டத்திற்கு பெரும் வித்திட்டவர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களாவர்.
அக்காலத்தில் பல இலட்சம் ரூபா செலவில் வேணன் அணைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அன்று அரச அதிபராக இருந்த திரு.வேணன் அபயசேகரா அவர்களின் நாமம் சூட்டப்பட்டது.

1957, 1958 காலப்பகுதியில் காரைநகர் தளுவிய ரீதியில் பெரும் விளையாட்டுப்போட்டிகள் நடாத்தி பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கி விளையாட்டு வீரர்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

1970ம் ஆண்டு ஈழத்து சிதம்பரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னர் கருங்கற்களினாலன திருப்பணிக்கு பல இலட்சம் ரூபாய்கள் முன்னின்று சேர்த்து வழங்கியதோடு, 1970ம் ஆண்டு கும்பாபிஷேக மலர் வெளியிட்டு வைத்தோம். அதுமட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து தலைசிறந்த நாதஸ்வர, தவில் வித்துவான்கள், சமய செற்பொழிவாளர்களை அழைத்து வருவதுடன் இந்தியாவில் இருந்து செவ்வந்தி பூக்கள் மற்றும் அரிய மலர்களை வரவழைத்து திருவாதிரை உற்சவ காலங்களில் வழங்கி வருவது இன்றுவரை நான் நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.

1991ம் ஆண்டு பாரிய இடப்பெயர்ச்சிக்கு பின்னர் கப்பல் மூலம் சென்று பார்வையிட்டு ஆலய பூசைகள் மற்றும் திருப்
பணிகள் தொடர்ந்து இடம்பெற முதன் முதலாக வழிவகைகள் செய்தேன். அதன் பின்னர் கொழும்பு வந்து கோயிலிற்கு ஏற்பட்ட சேதங்களை முன்வைத்து 50 இலட்சம் ரூபா நிதியினை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும், மணிவாசகர் மடாலயத்தில் இருந்த படையினரை வெளியேற்றவும் பெரும் பணியாற்றியிருக்கின்றேன்.

ஈழத்து சிதம்பரத்தில் சைவ உலகத்திற்கு முதன் முதலாக நாகவடிவம் கொண்ட 39 அடி உயர திருத்தேரிற்கு மூன்று
அடி உயரத்தில் தங்க கலசம் அடியேனால் 10.01.2006இல் ஊர் வலமாக எனது தலையில் எடுத்து வந்து பிரதிஸ்டை செய்தது இன்னமும் அதிசயமாக இருக்கின்றது. அன்று ஸ்தபதி திரு.ச.ஜெயகாந்தனுடன் புதிய தேரில் வெள்ளோட்டத்தின் போது மூன்றாம் வீதி வலம் வந்தது அதிசயத்தின் வெளிப்பாடாகவே காண்கின்றேன்.

காரை மைந்தன் கௌரவ திரு.தி.மகேஸ்வரன் அவர்கள் எனது மருமகன். அவர் ஒரு தெய்வீக மகன்.
அவர் அமைச்சராக இருந்த பொழுது ஈழத்து சிதம்பரம் மட்டுமல்லாது அனைத்து கோயில்களும் முன்னேற்றம் பெற்றன. கோயில்களின் நிர்வாகத்திற்கும் திருப்பணிக்கும் அதிகூடியளவில் தனது அமைச்சர் பதவி மூலம் பயன்களை பெற்றுக்கொடுத்தார். அவருடைய தெய்வீக பணிகளின் போது அவருடன் உடனிருப்பது பெரும் பாக்கியம் என கருதுகின்றேன்.

இந்த நிலையில் கொழும்பிலும் காரைநகரிலும் பலரை தொடர்பு கொண்டு எனது மருமகன் தி.மகேஸ்வரன் உதவியுன் அடியார் சபை நீதிமன்றம் செல்லாமல் சமாதானமாக ஈழத்து சிதம்பர திருப்பணிகளில் ஈடுபட முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதில் முயற்சிகள் செய்கின்றோம்.

ஈழத்து சிதம்பரத்தில் இன்னமும் பல திருப்பணிகள் செய்ய வேண்டிய தேவைகள் உள்ளன. மூன்றாம் வீதி சுற்று மதில்
அமைத்தல், வசந்த மண்டபம் சிறப்பான வேலைப்பாடுகளுன் அமைக்கப்பட வேண்டும்.

வாழ்க! வளர்க!

அமரர் மு.மு சுப்பிரமணியம் அவர்கள் 2007ம் ஆண்டு கனடா வந்திருந்த போது அவருடனான சந்திப்பின் போது மனேகரி சதாசிவம் அவர்கள் மற்றும் தீசன் திரவியநாதன் உடனிருந்த பொழுது அமரரின் கருத்துக்களை தனது எழுத்தில் தந்திருப்பவர் முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் மனோகரி சதாசிவம்.

Leave a Reply

Author

admin@karainews.com

Telephone :(+1) 416-821-8390 e-mail: theesan@karainews.com கடிதத் தொடர்புகளுக்கு: 34 - 331 Trudelle Street Scarborough, Ontario M1J 3J9 Canada

Related Posts

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’.

கனடாவில் தமிழர் பாரம்பரிய ஆதிகால இசைக்கருவியான ‘பறை’ வாத்தியம் முழங்க ‘பறை திருவிழா’. கனடா ரொறன்ரோவில் இருந்து 115 KM தொலைவில் அமைந்துள்ள Cobourg நகரத்திற்கு அருகில் பல ஏக்கர்...

Read out all

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

வழமைபோல Tea குடிப்பது கடமையாக இருந்தாலும், குடிக்கிற இடத்தையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து மறக்கமுடியாத சொர்க்கமாக மனதில் நிலைத்திருக்கும்.

Read out all

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

காரை ஊரவர்களிற்கு கோயிலும் பக்தியும் வாழ்க்கையில் பெரும்பகுதி. அதுவேதான் வாழ்வியலும்…. இடம்பெயர்ந்தாலும் திருவிழா என்றாலும் கும்பாபிஷேகம் என்றாலும் ஊரிற்கு போனால் தான் அனைத்தும் ஆன்மீகம்தான் என்பதை உணர்ந்து கொள்கிறது ஆன்மா..!

Read out all

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

கனடாவில் காரை மண்ணின் மைந்தனின் பறை முழக்கம் காண வாரீர்..! 20.06.2026 எதிர்வரும் சனிக்கிழமை.

Read out all

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாண்டுகளிற்கு மேலான நிலையில் ஈழத்து சிதம்பர அடியவர்கள் தில்லைகூத்தனினதும் ஆண்டிகேணி ஐயனது முழுமையான...

Read out all

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..!

திருமண வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்..! காரைநகர் களபூமி திக்கரையை சேர்ந்தவரும், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தாலும் ‘பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானில் நனிசிறந்ததுவே..’ என்ற கோட்பாட்டுக்கமைய ஊர் மணங்கமழும் வகையில் பிரான்ஸ்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×